சாம்பியன்ஸ் டிராபி: ரூ. 60 கோடி பரிசு.. ஐ.சி.சி. அறிவிப்பு

by Staff / 14-02-2025 02:55:43pm
சாம்பியன்ஸ் டிராபி: ரூ. 60 கோடி பரிசு.. ஐ.சி.சி. அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.19.45 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை ரூ. 9.72 கோடி வழங்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும் ரூ. 4.86 கோடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாகும்.

 

Tags :

Share via