கடையம் திமுக ஒன்றிய துணை செயலாளர் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

by Staff / 14-02-2025 03:52:08pm
கடையம் திமுக ஒன்றிய துணை செயலாளர் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முல்லையப்பன் என்பவரது இருசக்கர வாகனம் கருத்த பிள்ளையூரில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது நேற்று இரவில் மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையம் பகுதியைச் சார்ந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிருபர் சேர்மன் செல்வன் என்பவர் இருசக்கர வாகனம் தீ வைத்தது எரிக்கப்பட்டது தொடர்ந்து அந்த பகுதியில் அரசியல்வாதி வாகனங்களும் பத்திரிகையாளர் வாகனமும் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via