உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி உதவி பிரதமர் மோடி.
தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்ட நிலையில், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறியும், காயமடைந்தும் குழந்தைகள், பெண்கள் என 39 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி உதவி பிரதமர் மோடி அறிவிப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் தேசிய தலைமை கூடுதல் நிதி ஒதுக்கும் என்றும் காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Tags : உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி உதவி பிரதமர் மோடி



















