நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ் நீங்க ஒரு தேவதை...ஆட்சியர் கவிதா ராமு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

by Staff / 12-10-2022 03:35:54pm
நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ் நீங்க ஒரு தேவதை...ஆட்சியர் கவிதா ராமு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவரிடம் மாணவர்கள் சிலர், இன்ஸ்டாகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பல விதமாக குறுஞ்செய்திகள் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். "நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்", 'தேர்வில் மார்க் வாங்கலன்னா எல்லாரும் கேப்பாங்க மேம். உங்களையே நம்பியிருக்கேன்" , 'லீவ் விட்டதற்கு நன்றி மேம். உங்களை மறக்கவே மாட்டேன். என் தேவதை நீங்கள்" என்று நகைச்சுவையாக கோரிக்கைகளும், மழையை முன்னிட்டு விடுமுறை அளித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.இது குறித்த படங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo