நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.சோனியா காந்தியிடம்

by Editor / 17-08-2022 05:33:03pm
நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.சோனியா காந்தியிடம்

மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 'அரசுமுறைப் பயணமாக புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo