பிரபல நிறுவனத்தில் கொள்ளை 17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் அபேஸ்

by Editor / 17-08-2022 05:38:43pm
பிரபல நிறுவனத்தில் கொள்ளை 17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் அபேஸ்

லக்னோவில் உள்ள பிரபல நிறுவனத்தில் 17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சேமிப்பு கிடங்கில் திருட்டு நடந்துள்ளது. குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் திருடப்பட்டதாக கேட்பரி விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து தெரிவித்தார்.இது குறித்து சின்ஹாட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேட்பரி விநியோகஸ்தரான, ராஜேந்திர சிங் சித்து, திருட்டு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories