விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு..?

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் மக்களவை தேர்தலுடன் நடைபெறுமென கருதப்பட்ட நிலையில் ஜுன் 1-ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான 7 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஜுன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், 7-வது கட்ட மக்களவை தேர்தலுடன், தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் , அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல்கள் முடியும் வரை நடத்தப்படாது என்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.எனவும் தகவல்.
Tags : விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவாய்ப்பு