மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு-முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இந் நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கி மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அவர் வழங்கினார். அத்துடன் மாற்று திறனாளிகளின் அறையில் திமுக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் ஊனத்தை ஒரு சுமையாக கருதாமல் அது உரிமைகளின் வசியமாக பார்க்கப்பட வேண்டும் என்றும்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறைகளில் உறுப்பினர்கள் ஆகும் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரபத்தையும் மாற்றுத்திறனாளிகளுக்கு புகுந்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தியதோடு மாநில சமூக நலத்துறை ஏற்பாடு செய்திருந்த புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர்கள் கே. என். நேரு, மா சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
Tags :


















