தேர்தல் பணிகள் குறித்து இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

by Editor / 03-05-2025 10:06:02am
தேர்தல் பணிகள் குறித்து இன்று  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா, நலத்திட்டம் மற்றும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிய அறிவுரைகளை வழங்கவுள்ளார்.

 

Tags : தேர்தல் பணிகள் குறித்து இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

Share via