கிரேன் கம்பி அறுந்து இணைப்பு பாலம் உடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை - அரியலுார் மாவட்டத்தை இணைக்கும் சுமார் 1.5 கிலோ மீட்டர் துாரம் உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 5 மற்றும் 6வது துாண்களை இணைக்கும் வகையில் கான்கிரீட் போட்டுள்ளனர். இந்த கான்கிரீட்இடிந்து விழுந்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை தற்போது தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து கட்டுமான நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 12 அடி அகலம் 50 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாலத்தை ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்ற போது பாலத்தின் பாரம் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து பாலம் கீழே விழுந்தது. தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து விட்டதால், உயிர் சேதம் எதுவும் இல்லை. இதில் புதிதாக கட்டப்பட்ட துாண்களும் மற்றும் பாலமும் சிறியளவில் இடிந்து சேதம் அடைந்ததுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Tags : The crane wire was cut and the connecting bridge was broken.