பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை காலையில் புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மதியம் மதுரை வருகிறார்.அன்று மாலை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக தேசிய பாதுகாப்புப் படையினர்ஏற்கனவே கோவிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தரிசனத்தை முடித்த பிறகு, மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Tags :


















