ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

by Editor / 05-05-2021 03:17:31pm
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர். மேலும், சிஸ்ஸுக்கு சிறப்பு கவனிப்பு தேவை எனக் கூறினர். இதையடுத்து ஹலிமா சிஸ்ஸின் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்த சிஸ்ஸினுக்கு நேற்று ஒன்பது குழந்தைகள் பிறந்தன. 'மொராக்கோ மற்றும் மாலியில் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனைப் படி, சிஸ்ஸே ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஸ்ஸினுக்கு நேற்று சிசேரியன் மூலம், ஐந்து பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்பது குழந்தைகளும் தாயும் நலமாகவுள்ளனர்' என, மாலியின் சுகாதார அமைச்சர் பாண்டா சிபி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories