மதுபோதையில் முறைகேடாக வசூல் செய்த நகராட்சி ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம்
திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் தெப்பத் திருவிழாவில் பல்வேறு நபர்கள் சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்தனர்.
இந்தநிலையில் நகராட்சியில் பணிபுரியும் சுகாதார மேற்பார்வையாளர் களான ரவி, தனபால், தமிழ், உள்ளிட்ட மூன்று ஊழியர்கள் மதுபோதையில் முறைகேடான முறையில் பணம் கேட்டுள்ளனர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அங்கு உள்ள கடைக்காரர்கள் பதிவிட்டுள்ளனர்.
அதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் மூன்று நபர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags : Three municipal employees have been fired for illegally collecting alcohol