நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் இழுத்துக்கொள்ளும் பள்ளம்
ரஷ்யாவின் சைபீரியா கிராமத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனக்குள் எடுத்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.பாதாளத்துக்கான வாசல் என்றும் நரகத்தின் வாசல் என்றும் இதனை அழைக்கின்றனர். இந்த பள்ளம் பெரிதாகி வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலத்தின் பெரும் பகுதியை அது உள்வாங்கிக் கொண்டு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒரே பணி தொடங்கியது இதன் விளைவாக இது போன்ற பள்ளங்கள் ஏற்படுவதாகவும் உலக வெப்பமயமாதலால் காரணமாக இது போன்ற நரகத்தின் வாசல்கள் மேலும் தோன்றக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags :



















