பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகைகள் உயர்வு - தமிழ்நாடு அரசு

by Editor / 10-03-2025 04:35:14pm
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகைகள் உயர்வு - தமிழ்நாடு அரசு

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகளை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60,000ஆகவும் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25ஆயிரத்தில் இருந்து ரூ.50ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via