மாவீரன் அழகு முத்துக்கோனுக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறோம் ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், “மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறோம். துணிச்சல்மிகு சுதந்திரப் போராட்ட வீரரான அவர், கருணையுள்ள ஆட்சியாளராகவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பகால வழிகாட்டிகளில் ஒருவராகவும் விளங்கினார். அவரது வாழ்க்கை, தளராத போராட்டங்கள், உச்சபட்ச தியாகம் ஆகியவை காலனித்துவ அடிமைத்தனத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்பைத் தூண்டின" என கூறப்பட்டுள்ளது.
Tags :