இயக்குனராகி....வாழ்க்கையை வசப்படுத்தாமல்.....

by Admin / 09-12-2021 11:49:59pm
இயக்குனராகி....வாழ்க்கையை வசப்படுத்தாமல்.....

இயக்குனராகி....வாழ்க்கையை வசப்படுத்தாமல்.....

திரைப்படத்தில் நடிக்கவேண்டும்;இயக்கவேண்டும் என்பது  திரைத்துறை மீது  காதல்  கொண்டோரின்  கனவு.
சிலர் வாய்ப்பு கிடைத்து  நடிக்கவும்  இயக்கவும்  செய்திருக்கிறார்கள்..பலர்  வாழ்கையைத் தொலைத்து விட்டு,
வருந்தி  மடிந்தவர்கள்  ஏராளம். நூறு  பேர்   கோடம்பாக்கம்  வருகையில்  நூறு பேர் திரும்பிக்கொண்டிருப்பார்கள்.

தியாகராஜபாகவதர் காலம் தொடங்கி இன்று வரை திரைப்பட மோகம்; ஈர்ப்பு  குறைய வில்லை.ஆனாலும் ஒர்
ஆறுதல.   யூ டியூப் வந்த பின்பு ஒரளவு  திரைக்கனவு உள்ளோர் தாமே நண்பர்களுடன் சேர்ந்து குறும் படம்-
வெப் சீரியல்,புட் ரிவியூ  அது இதுவென்று ஏகப்பட்ட யூ டியூப் சேனல்கள்  தொடங்கி இணையதளவாசிகளைத்
திரைப்படத்தில் பார்க்காத  எல்லாவற்றையும்  பார்க்க வைத்து சந்தோசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான்,தென்னிந்தியாவின் மிகப்பிரமாண்ட படநிறுவனம்  ஏ.வி.எம் .இந்நிறுவனத்தால்,இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டு பல படங்களை இயக்கிய ஓர் இயக்குநர்   ,விஜயகாந்தை வைத்து மாநகர காவல் பட
இயக்கிய அந்த இயக்குநர்   30ஆண்டுகாலம் பட வாய்ப்பின்ற தவித்தவர்  நேற்று  ஏ,வி.எம் ஸ்டுடியோ ஏதிர் புற
ரோட்டில்  யாருமற்ற அனாதையாக இறந்து கிடந்திருக்கிறார்

திரைப்படத்துறை  சிலரை கோடிஸ்வரர்களாகவும் பலரை வாழ வழியற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
அதற்குக் காரணம்  திரை மோகம். எப்படியும் ெஜயித்து விடுவோம் என்கிற ஆசையிலே.. பலர் வாழ்கையை இழந்திருக்கிறார்கள்.:ஏன் இழந்து கொண்டிருக்கிறார்கள்.


இதோ...அருப்புக்கோட்டையைச்சேர்ந்தவர் எம்.தியாகராஜன். திரைப்படக்கல்லூரியில் டி.எப்டி படித்தவர்.
திரைப்படக்கல்லூரி மாணவர் ஆபாவணன்  போட்ட தொடக்கப்புள்ளி..இவரையும்  இயக்குனராக வழி சமைத்தது.
வெற்றி மேல் வெற்றி என்று நம்பிககையோடு வாழ்வை தொடங்கியவருக்கு....முப்பது ஆண்டுகள்தான்
கரைந்ததே தவிர வாய்ப்பு வசப்படவில்லை.ஆனாலும்,திரைத்துறை விட்டுப்போகாமல் இருந்தவருக்கு..வாய்ப்பை தேடி அலைந்தவர் நேற்று அனாதையாக மாண்டு போனார்.


சினிமாவிலிப்பவருக்கு  பெண் கொடுக்க மறுப்பதும்  சினிமாவிற்கு செல்ல நினைப்பவர்களை பெற்றோர் தடுப்பதும்
இதற்காகத்தான்,

 

Tags :

Share via