விடுதலை புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

by Staff / 14-05-2024 05:33:20pm
விடுதலை புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையைத் தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via