மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும்

by Admin / 09-05-2024 04:19:06pm
 மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும்

சார்த்தம் யாத்திரையின் ஒரு பகுதியாக நாளை மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார். வேத பண்டிதர்களின் வேதங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்படும். இதற்காக அங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் கட்டிடம் முழுவதும் 40 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவது வழக்கம்.

 மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும்
 
Tags :

Share via