போதையில் சாலையோரம் மயங்கி கிடந்த வாலிபர்

தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 30 வயது மதிக்க தக்க ஒருவாலிபர் பேன்சி கடை முன்பு போதையில் அந்த வழியாக வருபவரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
மாலை வேளை என்பதால் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் வந்து கொண்டிருந்தனர். மாணவிகளை கண்டதும் அந்த வாலிபர் ஆபாச செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக போதை அதிகமாக தலைக்கேறி திடீரென கடை முன்பு மயங்கி விழுந்தார்.இது போன்ற சம்பவம் தொடர்ந்து இப்பகுதியில் அரங்கேறி வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags :