அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்

by Staff / 12-10-2022 05:43:06pm
 அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்

வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு அரங்கேறவுள்ளது. இதேபோல் நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதையொட்டி இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயில் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினம் காலை 8.11 மணிக்கே மூடப்பட்டு விடும். மீண்டும் சுத்தி பூஜைகளுக்கு இரவு 7.30 மணிக்கே திறக்கப்படும். இதேபோல் சந்திர கிரகண நாளான நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 மணி வரை கிரகணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை திருக்கோயில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories