தவெக மாநாடு: இடத்தை கன்ஃபார்ம் செய்த நிர்வாகம்

by Staff / 08-08-2024 03:54:38pm
தவெக மாநாடு: இடத்தை கன்ஃபார்ம் செய்த நிர்வாகம்


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த அனுமதி கொடுக்கப்படாத நிலையில் தற்போது பொன்மலை ஜி கார்னரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இந்த மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், கட்சியில் யாருக்கெல்லாம், எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது குறித்தும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via