சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னை போக்குவரத்தில் மாற்றம்

by Editor / 06-08-2021 08:55:08am
சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னை போக்குவரத்தில் மாற்றம்

சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு, வருகிற 07, 09 மற்றும் 13.08.2021 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.75வது சுதந்திர தினவிழா 15.08.2021 ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 07, 09 மற்றும் 13.08.2021 ஆகிய தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் மூன்று நாட்களிலும் காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரைக்கும் கீழ்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கீழ்கண்ட வகைகளில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via