கார்விங் கலையில் வள்ளுவர்.. வாலிபர் அசத்தல்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி அரவிந்தன். கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் வல்லவரான இவர் 1330 குறட்பாக்களையும் பென்சில் முனையில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த எழுத்துக்களை வெறும் கண்ணால் பார்க்க இயலாது, லென்ஸ் மூலமாகவே பார்க்க முடியும். இதேபோல் சாக்பீசில் 'அ' என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் மிகவும் நுணுக்கமாக வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார். அவரது சாதனையை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.
Tags :