தமிழ்நாட்டில் ஏப்ரல்- 23 தேதி தேர்தல் -வாக்கு எண்ணிக்கை மே -4 ,வேட்புமனுதாக்கல் ஏப்ரல்-23

by Admin / 15-03-2026 04:34:27pm
தமிழ்நாட்டில் ஏப்ரல்- 23 தேதி  தேர்தல் -வாக்கு எண்ணிக்கை மே -4 ,வேட்புமனுதாக்கல் ஏப்ரல்-23

 தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.. தமிழ்நாடு, கேரளம் ,அசாம், மேற்கு வங்கம் ,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தல் குறித்த அறிவிப்பை செய்தியாளர்கள் மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ் ஐ ஆர் குறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உள்ளது என்பதையும் எஸ். ஐ .ஆர்பணிகள் அதன் காரணமாகவே முழு வீச்சில் நடைபெற்றதையும் 5 மாநிலங்களையும் சேர்த்து 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.மொத்தம் 824 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அசாம் மாநிலத்தின் 126 தொகுதிகளும் கேரளத்தில் 140 தொகுதிகளும் புதுச்சேரியில் 30 தொகுதிகளும் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளும் மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளும் உள்ளன.ரெண்டு புள்ளி 19 லட்சம் வாக்குச்சாவடிகள் அஞ்சு மணலில் அமைக்கப்படுகிறது தமிழ்நாட்டில் அஞ்சு புள்ளி 67 கோடி வாக்காளரும் புதுச்சேரி 9.45 லட்சம் உள்ளனர்.தமிழ்நாட்டில் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாறு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழ்நாட்டில் மொத்தம்  5. 67 கோடி வாக்காளர்கள் . இந்த மாநிலங்களில் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.2.19 லட்சம் வாக்குச்சாவடிகள். தேர்தல் முழுவதும் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையில் 5 மாநிலங்களிலும் 40 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படுவார்கள்என்றும் தெரிவித்தாா்.

தமிழ் நாடுஉள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட து .தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்தன.

தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதியும் வேட்பு மனு தாக்கல் முடிவு ஆறாம் தேதியும் வேட்பு மனு பரிசீலனை ஏற்பு ஏழாம் தேதியும் வேட்பு மனுதிரும்ப பெற ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நாலாம் தேதியும் நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் ஏப்ரல்- 23 தேதி  தேர்தல் -வாக்கு எண்ணிக்கை மே -4 ,வேட்புமனுதாக்கல் ஏப்ரல்-23
 

Tags :

Share via