குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தற்காலிக தடை
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக குற்றாலத்தில் பிரதானஅருவி, ஐந்துஅருவி, சிற்றருவி, புலி அருவி போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்காசி, விருதுநகர் தேனி மாவட்டங்களில் கன மழை பெய்தது.
Tags :

















