மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க அதிமுக முயற்சிப்பதாக.குற்றச்சாட்டு...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 19-02-2026 10:06:58pm
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க அதிமுக முயற்சிப்பதாக.குற்றச்சாட்டு...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க அதிமுக முயற்சிப்பதாக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இதுகுறித்து , திட்டத்தை யாரோ நிறுத்தப் போவதாக கூறி தேர்தல் தோல்வி பயத்தில் முதலமைச்சராக மு.க .ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அதிமுக  வாக்குறுதியாக மாதம் 2000 வழங்குவோம் என்று அறிவித்ததை கண்டு பயந்து தான் திமுக தற்போது ஒரே தவணையாக 5000 வழங்கியிருக்கிறது .அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் என முதலில் வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என மாற்றியதன் மூலம் சுமார் ஒரு கோடி பெண்களை திமுக அரசு ஏமாற்றி உள்ளது .அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2000 எவ்வித நிபந்தனைகளையும் இன்றி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via