"ஓய்வு வயதை 62ஆக உயர்த்த எந்த ஆலோசனையும் இல்லை"-

by Editor / 11-08-2024 10:22:04am

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தப்போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், "ஓய்வு வயதை 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எந்த ஆலோசனையும் இல்லை" என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

 

Tags : "ஓய்வு வயதை 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எந்த ஆலோசனையும் இல்லை"

Share via