பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). இவர் இன்று மதியம் லெட்சுமிபுரத்தில் மர்ம நபர்களால் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :