சென்னை தனியார் விடுதியில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூபாய் 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு இன்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்துகிறது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும்,ரூபாய் 70 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் எனவும், 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Global Investors Conference today at a private hotel in Chennai