பதைபதைக்க வைத்த பச்சிளம் குழந்தை கடத்தல்-குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த தம்பதியினர் யூனிஸ், திவ்யபாரதி இந்த தம்பதிக்கு 4தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஓன்று பிறந்தது.இந்த பச்சிளம் குழந்தை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறந்து 4 நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உடனடியாக போலீசார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, 6 தனிப்படை அமைத்து, விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கிடையில் குழந்தையை கடத்திய மர்மநபர்கள் ஆட்டோவில் தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்ற 2 பெண்கள், கோவை உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறுவதை கண்டறிந்த தனிப்படை போலீசார் குழந்தையை கேரளாவில் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டது.
Tags : The police arrested the accused child kidnappers