தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறைந்த சட்டமன்றத் தொகுதியாகியது ராதாபுரம் தொகுதி.

by Admin / 31-07-2023 12:06:08pm
தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறைந்த சட்டமன்றத் தொகுதியாகியது  ராதாபுரம் தொகுதி.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும்  அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

தமிழகத்தின் முதன் முறையாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள்,ஐடி ஐ நிறுவனங்கள்,ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என 306 இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

306 ஸ்மார்ட் வகுப்பறைகளும் மாவட்ட கல்வி அலுவலகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் கல்வி வல்லுனர்கள் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் எடுக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளைப் போல் ஏழை எளிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறுவதற்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo