தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் மனு பெட்டி அகற்றப்பட்டு பழைய நடைமுறை
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் மனு பெட்டி அகற்றப்பட்டு பழைய நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து மனு அளிப்பது வழக்கமான நடைமுறை. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் நேரடியாக தலைமை செயலகத்திற்குள் வருவதை தவிர்க்கும் பொருட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் மனு பெட்டி வெளி பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.இந்த புதிய நடைமுறையை பொதுமக்கள் அகற்ற வேண்டும் என்றும் மனுக்களை நேரடியாக பெற்று உரிய பரிசீலனை செய்வதன் மூலம் தங்களுடைய குறை தீரும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் பழைய நடைமுறையின் படியே பொதுமக்கள் தலைமைச் செயலகத்திற்கு சென்று நேரடியாக மனுக்களை வழங்குகிற நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்த்து தங்களின் புகார்களை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முதல்வரின் முகவரி இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலமாகவும் மனுக்களை பதிவு செய்யலாம் என்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வழியாகவும் புகார்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளதோடு ஸ்பெஷல் ஆபீசர் ,. முதல்வரின் முகவரி துறை, தலைமைச் செயலகம், சென்னை- 9 என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















