ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி  உடல் நல்லடக்கம்

by Editor / 31-05-2021 04:33:23pm
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி  உடல் நல்லடக்கம்


 

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி  சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் காலமானார். பரமேஸ்வரியின் உடல்  சென்னையில் இருந்து பெரம்பலூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.அங்கிருந்து  நேற்று ராசாவின் சொந்த கிராமமான பெரம்பலூரை அடுத்த வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டு, எவ்வித சடங்குகளும் இன்றி பரமேஸ்வரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல் அறிந்து  திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் ராசாவின் இல்லத்துக்கு சென்று பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தி ராசாவுக்கு ஆறுதல் கூறினார்கள். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டமிட்டப்படி கோவை சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் ராசாவின் வீட்டுக்கு சென்று மறைந்த பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தினார்.டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஜெகத்ரட்சகன், பொன்முடி, மதுரை மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஏராளமான திமுக தொண்டர்கள் பரமேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

 

Tags :

Share via