கொல்கத்தாவில் மம்தாவை சந்திக்கும் நிதீஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் நிதிஷ் குமார் மம்தா பானர்ஜியை மாநில செயலகமான நபன்னாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வியூகம் வகுப்பதற்காக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் பானர்ஜி இதேபோன்ற சந்திப்புகளை நடத்தினார்.
Tags :