கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசுகளில் முதலிடம் பிடிப்பது தமிழகம் தான்- ஜி .கே வாசன்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். மகளிர் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மகளிர்க்கு தொடர்ந்து அதிகாரம் கொடுப்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறார். 37 லட்சம் பெண்களுக்கு தமிழகத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் அடிப்படையில் சுமார் 5 கோடி கான கடன்கள் 67% மகளிர் கடன்கள் பெற்றுள்ளனர். சரியான ஊட்டச்சத்து தேசத்தின் ஒளி கீற்று என்று கூறுகிறோம் அதன் அடிப்படையில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு தமிழகத்தில் மட்டுமே பயன்பெற்றுள்ளனர்.. செல்ல மகள் சேமிப்பு திட்டம் 34 லட்சம் கோடி கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 93 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை என்னால் பட்டியலிட்டு கூற முடியும். மறுபுறம் மக்கள் விரோத ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கின்ற திமுக-வின் வேதனையான சாதனைகளை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பால் விலை, மின்சார கட்டணம் , பத்திரப்பதிவு கட்டணம், தண்ணீர் வரி,, சொத்து வரி உயர்வு என இவை எல்லாம் திமுக உங்கள் மீது ஏற்றிருக்கக்கூடிய சுமை. அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை,, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசுகளில் முதலிடம் பிடிப்பது தமிழகம் தான். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போக்குவரத்து ஊழியர்கள் என யாரின் குறைகளையும் நீக்காத அரசு இந்த நேரம் அரசு , இங்கு அதிகமாக மகளிர் உள்ளனர் இவர்களை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வருவது பொய்யான திராவிட மாடல்தான். மகளிர்க்கு தமிழக அரசு கொடுக்கும் உரிமைத் தொகை மீண்டும் அரசின் டாஸ்மார்க்குக்கு சென்று விடுகிறது. ஒரு கையில் பணத்தை கொடுத்து மறு கையில் பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது தான் திராவிட மாடல அரசு என்றார்
Tags : ஜி .கே வாசன்
















.jpg)


