இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களுக்கு ஆட்டம் இழப்பு...

by Admin / 04-01-2022 11:02:56pm
இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் 202 ரன்களுக்கு ஆட்டம் இழப்பு...

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் உள்ள வான்டரெர்ஸ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க  பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். விக்கெட்டுகள் மளமளவென சரிய, ,கேப்டன் கே.எல்.ராகுல், அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி,  முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்.  தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில்ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் டீன் எல்கார் 11 ரன், கீகன் பீட்டர்சன் 14 ரன் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ளது., இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via
Logo