by Editor /
28-06-2023
01:55:57pm
தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.இந்த நிலையில் அவருக்கு கருப்பு கொடி காண்பிக்க சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக பலரும் திரண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி,<br />
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கட்சி கொடிகளுடன் திரளாக திரண்டனர்.
இதனையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.காவல்துறை உயரதிகாரிகள் அனைவரிடத்திலும் சமாதானம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து திராவிடர் கொள்கைக்கு எதிராகவும் , பாஜக வின் கொள்கையை திணிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அதனை கண்டிக்கும் வகையில் கருப்பு கொடி காண்பிக்க திரளாக வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags :
Share via