சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் 16 ,17 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

by Admin / 15-11-2025 08:33:35pm
சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் 16 ,17 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

தமிழ்நாட்டில் பல்வேறு கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை மையம் அறிவித்துள்ளது.. அதன்படி, செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம், புதுச்சேரி தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர் ,கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் ,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகம் ஒன்று தொடர்பாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. .கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் 16 ,17 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo