ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம்

by Admin / 31-01-2022 04:12:34pm
ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதம் மாற மறுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டை இந்து அமைப்புகள் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற கோரி வலியுறுத்தி வந்த நிலையில் மாணவியின் தந்தை சார்பிலும் அதே கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி பள்ளி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் முன்னதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாணவி தற்கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது

 

Tags :

Share via

More stories

Logo