ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Admin / 29-08-2021 11:03:41pm
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்



   
ஏற்காட்டில் உள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்கள் கடந்த 27-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பூங்காக்கள் திறக்க அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்கள் கடந்த 27-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெங்களூரு, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோட பாயிண்ட், பொட்டார்னிக்கல் கார்டன், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஏற்காட்டில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடனும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு பிடித்தமான இடங்கு சென்று ஆங்காங்கே அவர்களது செல்போன்களில் செல்பி படம் பிடித்து மகிழ்ந்தனர்.

ஏற்காட்டிற்கு வந்தவர்களிடம் சுற்றுலா துறையினர் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் அடிக்கடி அறிவுறுத்தினர். ஏற்காட்டில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வர தொடங்கியதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

Tags :

Share via