"நடிகை சுஷ்மிதா சென், தொழில் அதிபர் லலித் மோடி-புதிய வாழ்க்கை, புதிய பயணம்"

நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். 2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில், 46 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை, புதிய பயணம்" என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
Tags : "Actress Sushmita Sen, Tycoon Lalit Modi-New Life, New Journey"