ஒண்டிவீரன் 250வது நினைவு தினம்:  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மரியாதை

by Editor / 20-08-2021 06:18:47pm
ஒண்டிவீரன் 250வது நினைவு தினம்:  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மரியாதைநெல்லையில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250வது நினைவுதினத்தை முன்னிட்டு அவ ரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், , மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்  250-வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவசிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன், ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பா.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல்வகாப், (பாளையங்கோட்டை), ஈ.ராஜா, (சங்கரன்கோவில்), முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், ஆகியோர் முன்னிலையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், , செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழக அரசின் சார்பில் இன்று நடைபெறும் ஒண்டிவீரன் நினைவு நாளில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாயத்துக் கொண்ட வராலாறு ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் பாளையத்தில் மாவீரன் பூலிதேவன் வெள்ளையரை எதிர்த்து போரிட்டார். 
வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலிதேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரர் ஒண்டிவீரன் ஆவார். நெல்லை மாவட்டம் வீரம் சிறந்த மாவட்டம், சுதந்திர போராட்ட காலங்களில் பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு உருவாகியுள்ளார்கள், அது அரசனராக இருந்தாலும், விரர்கள், மற்றும் அதற்கு பின்னால் வந்த தியாகிகள் இந்த மண் வீரம் சிறந்த மண் என்பதை இந்த நாட்டுக்கு எடுத்துகாட்டியவர்கள். அவர்களுடைய சரித்திரம் எல்லாம் சுதந்திர போராட்ட வராலாற்றில் மறைக்கபடமால் இருப்பதற்காக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்ற பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளுக்கு நினைவு சின்னங்கள் உருவாக்கி சுதந்திர போராட்டங்களில் தமிழர்களாற்றிய பங்கினை எடுத்துகாட்டும் விதமாக அவர்களுக்கு மணிமண்டபங்கள், நினைவு சின்னங்கள் எழுப்பியுள்ளார்கள்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கால ஆட்சியில் 2010ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தி (நினைவகங்கள்)துறையின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.01.2011 அன்று மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அருவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி கோட்டாட்சியர் (பொ) மூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மைதீன் பாசிக் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via