அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: அதிமுக கேவியட் மனு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்கலை. வளாகத்தில் வைத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதானார். இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags :