மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே அழகர் கோவிலுக்கு வர துவங்கினர்.
மலை மீதுள்ள புண்ணிய தீர்த்தமான நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடிய பின் மலைமீதுள்ள ராக்காயி அம்மன் மற்றும் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு நல்லபடியாக தங்களது வாழ்வில் அமைய வேண்டும், நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி மனம் உருகி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.மேலும் அழகர்கோவில் கள்ளழகர் ஆலயத்தில் பகல் பத்து வைபவம் நேற்று துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான இன்று பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் அதிக அளவு வருவதால் அப்பன் திருப்பதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :