போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்ட எஸ் பி.

by Staff / 01-01-2025 04:22:53pm
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்ட எஸ் பி.

தென்காசி மாவட்டம் புளியரை வழியாககேரள மாநிலத்திற்கு 700 க்கும் மேற்பட்டகனிமவள வாகனங்கள் சென்று வருகின்றன கடந்த ஆண்டு புத்தாண்டின் போதுகனிமவள வாகனங்களால் சுமார்10 மணிநேரம் போக்குவரத்துபாதிப்பு உருவானது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இதுபோன்ற நெரிசல்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக தென்காசி எஸ் பி ஸ்ரீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் அறிவுரை வழங்கியதை தொடர்ந்து அவரது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 2 நாட்கள் கனிமவள வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்ததால் சபரிமலை மற்றும் ஆரியங்காவு குளத்து புழை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் சென்று திரும்பி ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

 

Tags :

Share via