திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2001 தேர்தலில் ஆறு இடங்கள் வழங்கப்பட்ட நிலையில் ,புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததன் காரணமாக புதிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதனால், ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வரும் சூழலில் கொஞ்சம் இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் தளி மற்றும் பவானியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.திமுக கூட்டணியில் இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,விடுதலை சிறுத்தை கட்சி, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Tags :

















.png)
