by Staff /
04-07-2023
03:02:25pm
பழவந்தாங்கல் அருகே ரயில் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம் திருத்துறையூா் கிராமத்தை சேர்ந்தவா் தண்டபாணி (62).முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவா் தனது மனைவி மலா்செல்வியுடன் சென்னை பிராட்வேயில் உள்ள தனது இரு மகன்களை பாா்க்க திங்கள்கிழமை சோழன் விரைவு ரயிலில் வந்துள்ளாா். ரயில் பழவந்தாங்கல் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சிக்னலில் மாலை 5. 30 மணியளவில் நின்றுள்ளது. அப்போது கீழே இறங்கி நின்ற தண்டபாணி மீது எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Tags :
Share via