சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா: 50 நாடுகளுக்கு அழைப்பு -அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 05-11-2022 06:26:11pm
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா: 50 நாடுகளுக்கு அழைப்பு -அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவிற்கான சின்னம்  (லோகோ) வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு,சின்னத்தினை வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில்  பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரின் இலட்சியம் தமிழகத்தினுடைய பதிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இக்கண்காட்சியின் மூலம் உலகளாவிய புத்தகங்களை நாம் பெறுவதற்கும் நம் தமிழ் இலக்கியத்தை அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும், தமிழ் படைப்பாளர்களின் எழுத்துகள் உலகம் முழுவதும் சென்று சேரும். இதற்காக 50 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். 20 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுமென தெரிவித்தார். 

 

Tags :

Share via