மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 14-09-2024 11:14:25am
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார். நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று மீண்டும் வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜி.எஸ்.டி விவகாரத்தில் அன்னபூர்ணா உணவக உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று; மக்கள் பார்த்து வருகிறார்கள்.

மது ஒழிப்பு மாநாடு அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாடுக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக சொல்லியுள்ளார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தட பணிக்கான நிதி தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் ”இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via